டெல்டாவில் முதல்முறையாக தஞ்சையின் அபெக்ஸ் இருதய மருத்துவமனை இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

டெல்டாவில் முதல்முறையாக தஞ்சையின் அபெக்ஸ் இருதய மருத்துவமனை இருதய மாற்று அறுவை சிகிச்சை(HEART TRANSPLANT) செய்து சாதனை.

இதுபற்றி தஞ்சை அபெக்ஸ் இருதய மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்.ச.சிவசங்கர் மற்றும் டாக்டர்.ச.ரவிசங்கர் கூறியதாவது “தஞ்சை அபெக்ஸ் இருதய மருத்துவமனையில் 51 வயதான திரு.பால்ராஜ் என்பவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை இன்று செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இருமுறை 2012 மற்றும் 2019ல் ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டது. மருந்துகளின் துணையுடன் வாழ்த்து கொண்டிருந்த அவருக்கு மருந்துகளையும் மீறி நோயின் தன்மையின் காரணமாக அவரது இதயம் மிகவும் பலவீடம் அடைந்த காரணத்தினால் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டு நமது அபெக்ஸ் இருதய மருத்துவமனையை தேர்ந்தெடுத்தார்.”


“மதுரையைச் சேர்ந்த ஒரு இளம்நபர் மூன்று நாட்களுக்கு முன்பு சாலைவிபத்தில் மூளைச்சாவு மரணமடைந்தார். அவருடைய இருதயம் திரு.பால்ராஜ் அவர்களுக்கு நல்ல வகையில் பொருந்தியதால் தானமாக கொடுக்கப்பட்டது. அவரிடம் தானமாக பெறப்பட்ட இருதயம் இன்று நமது அபெக்ஸ் இருதய மருத்துவமனையில் திரு.பால்ராஜ் அவர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சையை அபெக்ஸ் இருதய மருத்துவமனையின் டாக்டர்.ச.சிவசங்கர்,டாக்டர்.ச.ரவிசங்கர் , டாக்டர். ஆஷிக் , திருமதி ஜெயலட்சுமி, திரு.சத்தியனந்தன், திரு.விக்னேஷ் ,திரு.அமித்.செல்வி. அஷ்வந்திகா, திரு.அலெக்ஸ் , திரு.சுந்தர் ,திரு.பாலாஜி, திரு.ஆனந்த் திரு.அஜித் குழுவினருடன் சேர்ந்து ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்.ஸ்ரீநாத் தலைமையிலான டாக்டர்.செந்தில்குமார் டாக்டர். ஜெபின் , டாக்டர். குணாளன், திரு.பூபதி ,திரு.கார்த்திக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இருதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.”


“இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற,
TRANSTAN அமைப்பின் முழுமையான ஒத்துழைப்பும், மதுரையிலிருந்து தஞ்சாவூர் வரை இருதயத்தை பாதுகாப்பாகவும் வேகமாகவும் கொண்டு வந்து சேர்க்க உதவிய காவல்துறை ரோந்து படையினரின் ஆதரவும் குறிப்பாக தஞ்சாவூர் போக்குவரத்து காவல்துறையின் சிறப்பான பணியும் முக்கிய காரணமாக அமைந்தது.” எனக் கூறினார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *